முட்டை உற்பத்தியில் ஒளியின் பங்கு
கோழிகளின் முட்டை உற்பத்தியானது அவைகளுக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு, மற்றும் ஒளி கிடைக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தது. கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியினை ஒளி தூண்டுவதால், எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒளியானது கோழிகளின் மண்டைஓடு, தோல், இறகுகளை ஊடுருவுகிறது. எஃப் எஸ் எச் ஹார்மோன் கோழிகளின் கருமுட்டைப் பையில் கருமுட்டைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பிறகு முதிர்ச்சியடைந்த கருமுட்டை எல் எச் ஹார்மோனின் செயல்பாட்டால்கருமுட்டையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
ஒளியினைப் பற்றிய தகவல்கள்
கேண்டெலா (Candle)
கேண்டலா எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியினை ஒரு திசையில் செலுத்தும் போது கிடைக்கும் ஒளியாகும்.
லூமன்
ஒரு சதுர அடி இடத்தில், ஒரு அடி தூரத்திலிருந்து ஒளியானது விழும் போது கிடைக்கும் ஒளியின் அளவு
ஃபுட் கேண்டில்
ஒரு இடத்தில் விழும் ஒளியின் அளவினை புட் கேண்டில் எனும் அலகால் அளக்கலாம்.
லக்ஸ்
ஒரு லக்ஸ் ஒளி அளவு என்பது ஒரு அடியில் விழும் ஒரு லூமன் ஒளியின் அளவினைப் பொருத்தது.
1 foot candle = 10.76 lux
ஒளியின் வகைகள்
கோழிப்பண்ணையில் உபயோகிக்கப்படும் நான்கு ஒளி வகைகளாவன:
ஒளி மேலாண்மை
கோழிப்பண்ணையில் விளக்குகள் அமைக்கப்படுவதைப் பொறுத்து அவற்றின் செயல்திறன் இருக்கும். கோழிக்கொட்டகைகளில் விளக்குகளைப் பொறுத்தும் போது கீழ்க்கண்ட முக்கியமான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
கோழிகளின் வளரும் பருவத்தில் வெளிச்சத்தினால் ஏற்படும் விளைவுகள்
வளரும் பருவத்தில் கோழிகளுக்கு அளிக்கப்படும் வெளிச்சத்தினைக் குறைப்பதால் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
ஒரு நாளில் வெளிச்சத்தைக் குறைப்பதால் கோழிகளின் இனப்பெருக்க முதிர்ச்சி அடைவது மூன்று வாரங்கள் தள்ளிப்போகும். வெளிச்சத்தைக் குறைத்து, அதே சமயத்தில் தீவனத்தையும் குறைத்தால் 4 வாரம் வரை கோழிகளின் இனப்பெருக்க முதிர்ச்சியினைத் தள்ளிப் போடலாம்.
முட்டை உற்பத்தி செய்யும் பருவத்தில் வெளிச்சத்தினால் ஏற்படும் பயன்பாடுகள்
கோழிக்கொட்டகையில் பகலில் அதிக நேரம் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், கோழிகளின் உடலில் எஃப் எஸ் எச் மற்றும் எல் எச் ஹார்மோன்கள் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரந்து முட்டைகளின் உற்பத்தி அதிகரிக்கும். ஒளியின் வெளிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் முட்டை உற்பத்தி அதிகரிக்கும். நடைமுறையில், ஒரு புட் கேண்டில் ஒளி அடர்த்தி முட்டைக்கோழிக் கொட்டகையில் தேவைப்படும்.பல அடுக்கு கூண்டு முறைக் கோழி வளர்ப்பில் கீழ் அடுக்கில் உள்ள கோழிகளுக்கு 0.5 புட் கேண்டில் அளவு வெளிச்சம் தேவைப்படும். அதிக பட்ச முட்டை உற்பத்திக்கு, கோழிகளின் அதிகபட்ச முட்டை உற்பத்தி செய்யும் வயதில் தினமும் 16 மணி நேரம் வெளிச்சம் தேவைப்படும்.காலையிலும், மாலையிலும், அல்லது இரண்டு வேளைகளிலும் செயற்கை வெளிச்சம் கோழிகளுக்கு அளிக்கலாம்.
வளரும் மற்றும் முட்டையிடும் பருவத்திற்கு சேர்ந்து வெளிச்சம் அளித்தல்
கோழிகளுக்கு வெளிச்சம் அளிக்கும் போது நினைவில் கொள்ளப்பட வேண்டிய இரண்டு முக்கிய விசயங்கள் பின்வருமாறு:
இன் சீசன் ஃப்ளாக்ஸ்
இயற்கையான வெளிச்சம் குறைவாக உள்ள கால நிலைகளில் கோழிகள் வளர்க்கப்படும் போது, அவற்றின் கடைசி வளர்ச்சி சுழற்சி நிலை இன்சீசன் ஃப்ளாக்ஸ் எனப்படுகிறது. பொதுவாக பூமியின் வடக்கு அரை வட்டத்தில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பொரிக்கும் கோழிக்குஞ்சுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அவுட் சீசன் ஃப்ளாக்ஸ்
கோழிக் குஞ்சுகள் செப்டம்பர் 1 முதல் 28 பிப்ரவரி வரை பொரிப்பவை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் சூரிய வெளிச்சம் காலஅளவு அதிகமாகி கொண்டே போகும்.
திறந்த பக்கங்கள் கொண்ட வளர்கோழி மற்றும் முட்டைக் கோழிபண்ணைகளில் ஒளி மேலாண்மை
a) இன் சீசன் ஃப்ளாக்ஸ்
செயற்கை வெளிச்சம் 20 வாரங்கள் வரை கோழிக்களுக்கு தேவைப்படாது. ( கறிக்கோழிகளுக்கு 22 வாரங்கள் வரை ). 20 வார காலத்தில் வெளிச்சம் 13 மணி நேரம் இருக்குமாறு அமைக்கவேண்டும். பிறகு வாரம் ஒரு மணி நேரம் என தினம் 16 மணி நேரம் அடையும் வரை அதிகரிக்கவேண்டும்.
b) அவுட் சீசன் ஃப்ளாக்ஸ்
இரண்டு வகையான முறையில் பராமரிக்கப்படுகிறது.
i) நிலையான ஒளி நாள் அமைப்பு
வளர்க்கோழிகள் 20 வாரத்தை அடையும் போது அதன் இயற்கை ஒளியின் அளவை கண்டறியவேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் ஒளியின் அளவை அதிகரித்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மொத்த ஒளி நேரம் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
ii) குறைக்கும் ஒளி நாள் அமைப்பு
வளர்க்கோழிகள் 20 வாரத்தை அடையும் போது அதன் இயற்கை ஒளியின் அளவை கண்டறியவேண்டும்.பிறகு 7 மணி நேரம் சேர்க்கவேண்டும். வாரம் 20 நிமிடங்கள் ஒளி நாள் குறைக்கவேண்டும்.
வாரம் ஒரு மணிநேரம் ஒளி அளவை அதிகரித்து தினம் 16 மணி நேரம் அடையவேண்டும்.
ஒளி தூண்டப்படாதது
ஒளி தூண்டப்படாதது என்பது நீண்ட ஒளி அளவுகளுக்கு கோழிகள் தூண்டப்படாதது. ஒளி தூண்டப்படாதது அதிகமான ஒளிநாள் கோழிகளில் குறைந்த முட்டை உற்பத்தி ஏற்படுத்துகிறது.
மாறுபட்ட ஒளி அமைப்புகள்
இந்த அமைப்பில் மொத்த ஒளி நேரம் 24 மணிநேரமாக இருக்காது.இதில் இரண்டு வகைகள் உள்ளன. நீண்ட நாள் ( 14 மணி நேரம் வெளிச்சம் + 14 மணி நேரம் இருட்டு ) குறுகிய நாள் ( 11 மணி நேரம் வெளிச்சம் + 11 மணி நேரம் இருட்டு ). நீண்ட நாள் அமைப்பில் முட்டை ஓட்டின் தரம் அதிகமாகிறது. அதேபோல் குறுகிய நாள் அமைப்பில் முட்டை உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால் இந்த அமைப்பு தினசரி வேலை முறைகளில் பொருந்தாது. இதற்கு ஒளி புகாத கோழிக்கொட்டகைள் தேவைப்படும்.